தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஆராய யாழ்ப்பாணம் செல்லும் கோட்டாபய!






வடக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இம்மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.







கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனை தெரிவித்தார்.


வடக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும். வட மாகாண மக்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவது அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.


Powered by Blogger.