சிகிச்சைக்காக தன்னிடம் வந்த நோயாளிகளை முகத்தைக்கூட பார்க்காமல் போகப்பொருள் போல மோசமாக நடத்தியிருக்கிறார் கனடா நாட்டு நரம்பியல் நிபுணர் ஒருவர்.
கால்கரியில் நரம்பியல் நிபுணராக இருந்தவர் Keith Hoyte (71).
தன்னிடம் சிகிச்சைக்காக வந்த 28 பெண் நோயாளிகளை தனது 30 ஆண்டு கால பணியின்போது மோசமாக நடத்தி அதிலிருந்து இன்பம் கண்டிருக்கிறார் Hoyte.
17 வயது முதல் 46 வயது வரையுள்ள அவரது நோயாளிகள் அவர் நடந்துகொண்ட விதத்தால் கடும் குழப்பம் அடைந்துள்ளார்கள்.
தன்னிடம் தலைவலி, தலை சுற்றல் போன்ற காரணங்களுக்காக வந்த ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி சோதித்திருக்கிறார் அவர்.
மார்பகங்களை தேவையில்லாமல் தொடுவது, ஊசியால் குத்துவது, பெண்கள் அனுமதியின்றி அவர்களது ஆடைகளை வலுக்கட்டாயமாக அகற்றுவது என்று பல செயல்களில் ஈடுபட்டுள்ள Hoyte, நோயாளிகளை பரிசோதிக்கும்போது அவர்களது கண்களைப் பார்த்து பேசுவதே இல்லையாம்.
ஒரு 19 வயது இளம்பெண்ணின் மார்பகங்களை அவர் தேவையில்லாமல் பிடித்தபோது, அந்த பெண் அவரது கையைத் தட்டி விட, அந்த பெண்ணிடம் கடுமையாக கோபப்பட்டுள்ளார் Hoyte. நோயாளியின் உடையை அகற்றுவதற்கு காரணம் என்ன, ஏன் அவர் இப்படி தொடுகிறார் என அந்த விடயத்திற்கும் காரணமும் கூறியதில்லையாம் அவர்.
ஒவ்வொரு முறை அவரிடம் சிகிச்சைக்கு செல்லும்போதும், அவர் நடந்து கொண்ட விதத்தால், குழப்பமும், அவமானமும், கோபமும் அடைந்தவர்களாய், தங்கள் மீதே வெறுப்பைக் காட்டிக் கொண்டு தான் திரும்புவார்களாம் அவரது நோயாளிகள்.
எனவே, அவரது ஒரே நோக்கமே தங்களை பயன்படுத்தி இன்பம் அனுபவிப்பதுதான் என்பதைப் புரிந்துகொண்ட பெண்கள் ஒவ்வொருவராக பொலிசில் புகாரளித்துள்ளார்கள்.
1991ஆம் ஆண்டு ஒரு பெண், 2008ஆம் ஆண்டு மற்றொரு பெண், 2018இல் மற்றொரு பெண் என ஒவ்வொருவராக Hoyte மீது புகாரளிக்க, பொலிசார் அவர் மீது 3 பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள்.
இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானதை அறிந்ததும், தொடர்ந்து பல பெண்கள் அவர் மீது புகாரளிக்க முன்வந்தார்கள்.
மொத்தம் 28 பெண்கள் புகாரளிக்க, ஓய்வு பெற்று மகிழ்ச்சியாக வாழும் காலகட்டதில் சிறைக்கு செல்கிறார் Hoyte.
இம்மாதம் (ஜனவரி) 17ஆம் திகதி Hoyteஇன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. பல நாடுகளில், இப்படி தங்களை நம்பி சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் தவறாக நடந்துகொள்ளும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது.