சமகால அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் ஊழியர் சபைக்கு எந்தவொரு குடும்ப உறுப்பினர்களையும் நியமிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர் ஒருவரை பிரத்தியேக செயலாளராக அமைச்சர் ஒருவர் நியமித்துள்ளார். எனினும் அவர்களுக்கு பதிலாக வேறு நபர்களை நியமிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, தனது ஊழியர் சபைக்காக எந்தவொரு குடும்ப உறுப்பினர்களையும் நியமிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.