உன்னிச்சை குழத்திற்கு அருகில் திருவள்ளுவர் சிலை இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் இன்று வள்ளுவர் சறையினை திறந்து வைத்துள்ளார். மண்முனை மேற்கு பிரதேசசபை உறுப்பினர் குகநாதனின் முயற்சியால் இச் சிலை நிறுவப்பட்டதாக சொல்லப்படுகின்றது.
திருவள்ளுவரை திருவள்ளுவநாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர். இவரை சைவர் என்றும், இவருடைய திருக்குறளை சைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். திருவாவடுதுறை ஆதீனமாகிய கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள் திருவள்ளுவர் சித்தாந்த சைவர் எனும் நூலை எழுதியுள்ளார். அதில் திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதைப் பற்றி எழுதியுள்ளார்.
அழுக்காறாமை எனும் அதிகாரத்திலும் , ஆள்வினையுடைமை எனும் அதிகாரத்திலும் திருவள்ளுவர் திருமகளையும் அவளுடைய மூத்தவளான தவ்வையையும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டுக் குறள்களிலுமே தற்போது வழக்கில் இருக்கும் திருமகளின் தன்மையும், மூதேவியின் தன்மையும் ஒத்துப் போகின்றன.
இது இப்படி இருக்க இங்கே வைக்கப்பட்டுள்ள சிலையில் திருநீறு அணியாமல் உள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இச் சிலையானது சமூக வலைத்தளங்களில் பலராலும் வமர்சிக்கப்பட்டுக்கொண்டிருப்பதை காணமுடிகின்றது.
படித்த மேதாவி என்று பாராளுமன்றம் அனுப்பினால் முட்டாள்தனமதான வேலைகளை செய்துகொண்டு இருக்கிறாரே இந்த சிறிநேசன் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சிப்பதை காணக்கூடியதாக உள்ளது.