அரசி, வெங்காயம் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையை மோசடியான முறையில் அதிகரித்தால் சட்டத்தை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.
அவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, நுகர்வோர் விவகார ஆணையத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை மற்றும் ஏனைய பிரதான வர்த்தக நிலையங்களுக்கு அரிசி வழங்குபவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
பண்டிகை நாட்களில் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி வர்த்தக நிலையங்களுக்கு வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை வழங்குமாறு நுகர்வோர் விவகார ஆணையத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பொருட்களின் விலை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி நேற்று முன்தினம் நாரஹென்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டதனை தொடர்ந்து ஜனாதிபதி இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அத்துடன் வரி நிவாரணங்கள் உரிய முறையில் பொது மக்களுக்கு கிடைக்கின்றதா என ஆராய்ந்து தனக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.