மட்டு மேயரின் உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி – மேயருக்கு எதிராக சட்டம் பாயுமா?











நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் செயற்படும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களின் நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையின் 27 ஆவது சபை அமர்வில் 05.12.2019 (வியாழக்கிழமை) காலை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் உத்தரவிட்டிருந்தார்.










டிசம்பர் 5 ம் திகதிமுதல் ஜனவரி 5ம் திகதிவரை தனியார் வகுப்புக்கள் தடைசெய்யப்பட்டிருந்தன.





 தற்போது நாடெங்கும் பெய்து வரும் அடைமழை காரணமாக மட்டக்களப்பின் பல்வேறு பிரதேசங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் கல்வி நிலையங்கள் தொடர்ந்து செயற்பட்டு வருகின்ற காரணத்தினால் அங்கு நடைபெறுகின்ற வகுப்பினை தவிர்க்க முடியாத நிலையில் வருகை தருகின்ற பிள்ளைகளும் தொடர்ச்சியான மழை மற்றும் குளிர் காரணமாக பாதிக்கப்பட்டு நோயுறுகின்றதாகவும், மற்றும் வகுப்புக்கள் இடம்பெறுகின்ற வளாகத்திலும் வெள்ள நீர் தேங்கி நிற்பதனால் டெங்கு போன்ற நோய்த் தொற்றுக்களும் பிள்ளைகளுக்கு ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் பெற்றார் விசனம் தெரிவித்ததுடன் தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாட்டினை ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை சீரடையும் வரை மாணவர்களின் உடல் ஆரோக்கியம், பாதுகாப்பு கருதி இடைநிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுள்ளனர் அதனாலேயே இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்ட மேயர்.





இந்த அறிவித்தலை மீறியும் பெற்றோரது கோரிக்கைகளை உதாசீனம் செய்து மாணவர்களின் நலனை கவனத்தில் கொள்ளாது கல்வி நடவடிக்கைகளைத் தொடரும் உரிமையாளர்களுக்கு எதிராக மாநகர சபையின் கட்டளைச் சட்டத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதோடு இதனை கண்காணிப்பதற்கு சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.





ஆனால் இவை அனைத்தையும் மீறி
மேயர் தனது மகளை பிரேத்தியக வகுப்பிற்கு தொடர்ந்து அனுப்புவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.


தனது மகளை கல்லடி பிள்ளையார்
கோவில் வீதியில் உள்ள இடத்திற்கு நேற்றுக்கூட வகுப்பிற்காக அனுப்பியதை எம்மால் அவதானிக்க
முடிந்தது.


சாதாரண மக்கள் செய்யும் சிறு
குற்றங்களுக்கே பாரிய தொகைகளை தண்டம் விதிக்கும் மேயர் தனது தீர்மானத்தை தானே மீறி
செயற்படுவது நியாயமானதா?





ஏழைகளின் பிள்ளைகளை வீட்டில்
முடக்கிவிட்டு தன் பிள்ளையை படிப்பிற்கும் இவரின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுப்பது யார்?





Powered by Blogger.