கருணா பிள்ளையானின் இணைவு சாத்தியமா?







கருணா பிள்ளையான் இணைவு சாத்தியமா? கருணா கிழக்கு
மக்கள் மனதில் இடம்பிடிப்பாரா? என்கின்ற கேள்விகள் பலரது மனங்களில் இன்று உள்ளது. 





ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடன் மிக வேகமாக தனது அரசியல் காய் நகர்த்தல்களை கருணா
அவர்கள் மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.









கிழக்கிலே
தனது இருப்பை பலப்படுத்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார காலத்திலேயே திட்டமிட்டு செயற்பட்டதை
காணக்கூடியதாக இருந்த்து.


அதற்காக அவர்
பல யுக்திகளைக் கையாண்டார். கிழக்கிலே பிள்ளையானுக்கு அதிகரித்துவரும் அரசியல் வாக்கு
வங்கியையும் ஆதரவையும் தனது பக்கமும் திசை திருப்ப சில யுக்திகளை கையாளத் தொடங்கினார்.





ஜனாதிபதித்
தேர்தல் மேடைகளில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாஜா ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக பேசுகின்றாரோ
இல்லையோ பிள்ளையானுக்கு ஆதரவாகவும் பிள்ளையானின் விடுதலைபற்றியும் பேசத் தவறுவதில்லை.
இதற்கு காரணம் பிள்ளையானின் கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் தன் பக்கம் ஈர்க்கும்
ஒரு யுக்தியாகும்.





மறுபுறத்தில்
பிள்ளையானின் கட்சி உறுப்பினர்களுடன் நெருக்கமான உறவினைப் பேணியதுடன் தனது கூட்டங்களுக்கு
அவர்களையும் அழைத்து இருந்தார்.





ஜனாதிபதித்
தேர்தல் காலத்திலும்சரி இப்பொழுதும் வருகின்ற தேர்தல்களில் பிள்ளையானுடன் இணைந்து தான்
போட்டியிடவுள்ளதாக கூட்டங்களில் பேசி வருவதை அவதானிக்க முடிகின்றது.





ஆனால் இணைந்து
போட்டியிடுவது தொடர்பில் பிள்ளையான் தரப்பில் இதுவரை எந்த கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை.


கிழக்கிலே
கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு ஒரு கட்சியில் போட்டியிடுவது வரவேற்கத்தக்கது. பலரது
எதிர்பார்ப்பும் அதுவே.





ஆனாலும்  கருணா அவர்கள் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து
வந்தவுடன் கிழக்கு மாகாணத்தில் 90 வீதமான தமிழ் மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.





அவருக்கு
கீழே செயற்பட்ட சிலரது அடாவடித்தனங்களும் செயற்பாடுகளும் மக்களை வெறுப்படையச் செய்த்துடன்
கருணாமீதான ஆதரவையும் கேள்விக்குறியாக்கியது.





கிழக்கிலே
இடம்பெற்ற பல தும்பியல் சம்பவங்கள் கருணா அவர்களை கிழக்கு மக்களின் மனங்களிலிருந்து
தூர விலக்கிச் சென்றது. அச் சம்பங்களுக்கும் கருணாவுக்கும் தொடர்புகள் இல்லை என்றாலும்
கருணாவின் கீழ் செயற்பட்டவர்களாலேயே கருணா அவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.





இதனால் கிழக்கு
மக்கள் குறிப்பாக மட்டக்களப்பு மக்கள் கருணா அவர்களை வெறுக்கும் நிலைக்குச் சென்றனர்.





இச் செயல்களில்
ஈடுபட்ட கருணாவின்கீழ் செயற்பட்ட எவரும் இன்று கருணாவுடன் இல்லை என்றாலும் கடந்தகால
வடுக்கள் மக்கள் மனங்களில் ஆறாத வலியை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.









இக் காலகட்டத்தில்
கருணா அவர்கள் கடந்தகால வடுக்களை ஆற்றுப்படுத்த மக்கள் மனங்களில் இடம்பிடிக்கவேண்டும்.
கடந்தகால செயற்பாடுகளை மறந்து மக்கள் கருணாவுடன் பயணிக்க முன்வருவதற்கு மக்களுக்கு
நம்பிக்கைத் தன்மையினை ஏற்படுத்தவேண்டும்.





ஆனாலும் அது
இன்று நடக்கின்றதா என்றால் கேள்விக்குறியே. கருணாவையோ பிள்ளையானையோ துரோகி என்று ஏற்றுக்
கொள்ளும் மனநிலையில் கிழக்கை நேசிக்கும் மக்கள் எவரும் இல்லை. இப்போது இரு விடயங்களில்
கருணா மீது பலரும் குற்றம்சாட்டுகின்றனர். அவ் இரு விடயங்களையும் கருணா அவர்கள் மாற்றிக்கொள்ள,
 திருத்திக்கொள்ளவேண்டும்.





நிகழ்காலத்தில்
நடக்கும் பல சம்பவங்கள் பல கருணாவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வருவதை அவர் அறியாமலிருக்கலாம்.
ஆனால் அவருடன் பயணிப்பவர்கள் இருப்பவர்கள் அவற்றை அவருக்கு புரியவைக்கவேண்டும். இப்போது
தன்னுடன் இருப்பவர்களை அவர் மீழ் பரிசீலனை செய்யவேண்டும். சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களை
உள்வாங்கி மக்கள் மத்தியில் நம்பிக்கையினை ஏற்படுத்தவேண்டும்.





மேற்குறிப்பிட்ட
விடயங்களில் கருணா அவர்கள் கவனம் செலுத்தவேண்டும். இல்லையேல் கருணா பிள்ளையான் இணைவு சாத்தியமற்றதொன்றாகிவிடும்.








Powered by Blogger.