பாவனையாளர்களுக்கு மிக மோசமான சேவையினை வழங்கும் களுவாஞ்சிகுடி மின்சாரசபை








களுவாஞ்சிகுடி மின்சாரசபை
பாவனையாளர்களுக்கு மிக மோசமான சேவைகளை வழங்குவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.





மின்வெட்டு. மின்கடத்தும்
கம்பிகளை கேபிள்களாக மாற்றும் திட்டத்தில்
ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில்
இந்த வேலை கடந்த ஜூன் மாதம்
25ம்
திகதி ஆரம்பமானது
.


 இது ஒரு நல்ல திட்டம். இதனால்
பல நன்மைகள் உள்ளன.







 1).மின்சார வீண்
விரயம் தவிர்கப்படுகிறது.


 2).கொழுவி
மின்சாரத்தை திருடுவது தடுக்கப்படுகிறது.


 3).மின்கம்பிகள்
காற்றடிக்கும்போது ஒன்றுடன் ஒன்று மோதி அறுந்து விழுந்து ஏற்படும் விபத்து
தடுக்கப்படுகிறது.


4).கம்பிகள்
ஒன்றுடன் ஒன்று மோதுவதால் ஏற்படும் மின்தடை தடுக்கப்படுகிறது.


 5).கம்பிகள்
பாதுகாப்புக்காக வெட்டப்படும் நிழல்தரும் மரங்கள் பாதுகாக்கப்படுகின்றன.


 6).மரம்
வெட்டுவதற்காக ஈடுபடுத்தப்படும் ஆளணியும்
,செலவும் இல்லாமல் போகிறது.





இப்படி பல நன்மைகள் இருப்பதால் இந்த
செயல் மிகவும் நல்லது ஆனால் இந்த வேலையை
CEB Contract basis ல்
கொடுத்துள்ளது
. Contact ல்
கொடுக்கும்போது கூடிய ஆளணியை கொண்டு குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கவேண்டும்
என்ற நிபந்தனையுடன் கொடுத்திருக்கவேண்டும் ஆனால் இந்த பெரிய வேலையை ஆறு அல்லது ஏழு
பேரே செய்கின்றனர்


ஒரு காலத்தில் மின்சாரம் இன்றியே
வாழ்ந்தோம் ஆனால் இன்று மின்சாரம் இன்றி வாழமுடியாது என்று மின்சாரத்துடன்
இசைவாக்கம் அடைந்து விட்டோம்.


மின்வெட்டால் பொதுமக்கள் மட்டுமன்றி
விவசாயிகள்
,வர்த்தகர்கள்
என பலரும் பாதிக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில் குறித்த பிரதேசத்தில்
இந்த வேலைத்திட்டம் பின்வரும் நாட்களில் மேற்கொள்ளப்பட்டன.
ஜூன் மாதம்: 25,27. ஜூலை மாதம் : 2,4,8,11,18,23,25,30. ஆகஸ்ட்
மாதம் உயர்தர பரீட்சை காரணமாக மின்வெட்டு இல்லை.
செபடெம்பர்
மாதம் :
4,9,12,19,26. அக்டோபர்
மாதம்:
9,16 நவம்பர்
மாதம்:
13,20,27,30 டிசம்பர்
மாதம்:
18,21 இன்னும் வேரை
முற்றுப்பெறவில்லை வரும் வாரங்களிலும் தொடரலாம்.


உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில்
உரிய கவனம் செலுத்துவார்களா? அல்லது உரிய அமைச்சர் மட்டத்திற்கு நாம் கொண்டு செல்லவேண்டுமா?





Powered by Blogger.