வெள்ளை வான் தொடர்பிலான செய்திகளை வெளியிட்ட நபர்கள் இருவரும் இன்று குற்றப்புலானய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்ன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட குறித்த நபர்கள் இருவரும் முன்னாள் ஜானதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள் குறித்து பல தகவல்களை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் குற்றப்புலானய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள வெள்ளை வான் சாரதிகள் என கூறப்படும் இருவரும் விசாரணைகளுக்கு உ ட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.