அண்மைக்காலத்தில் கிழக்கிலே பல கட்சிகள் தோற்றம் பெற்றன. அக் கட்சிகள் சிலவற்றின் நோக்கங்கள் பணமீட்டுவது. கொள்ளையடிப்பது, மக்களை ஏமாற்றுவது. அப்படிப்பட்ட ஒரு கட்சியின் ஊழல்களையும், ஏமாற்று நடவடிக்கைகளையுமே இன்று பார்க்க இருக்கின்றோம்.
புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி பல இலட்சங்களை சுருட்டிய இலட்சிய தேசிய முன்னணியின் ஏமாற்று வேலைகளுக்கான பல ஆதாரங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. கட்சியை வளர்க்க, முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்துக்காக , விதவைகளுக்கு வாழ்வாதாரங்களை ஏற்படுத்த, வர்த்தக உடன்படிக்கைகள் என்று புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பல மில்லியன்களை கொள்ளையடித்து ஏமாற்றியுள்ளனர்.
இக் கைங்கரியங்களை இலட்சிய தேசிய முன்னணியின் நிறுவனரான அவுஸ்ரேலியாவில் வசிக்கும் புண்ணியமூர்த்தியும் கட்சியின் தலைவரான மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த ரகுநாத் என்பவரும் இன்னும் சில பெண்களும் உடந்தையாக இருக்கின்றனர். அதிகமான பணப்பரிமாற்றங்கள் பெண்களின் வங்கிக் கணக்கிலேயே இடம்பெற்றுள்ளன. இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் எமக்கு ஆதாரங்களை அனுப்பிவைத்துள்ளனர்.
தாம் ரணில், சஜித்துடன் தொடர்பில் இருப்பதாகவும் பல வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்தித் தருவதாகவும் கூறி பல மில்லியன்களை பலரிடம் பெற்று ஏமாற்றியுள்ளனர்.
நாம் சட்ட நடவடிக்கைக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருப்பதனால் பாதிக்கப்பட்டவர்கள் விபரங்களை battitv24@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்