வடக்கு, கிழக்கிற்கு யார் ஆளுனர்?



தமிழர் தாயகமான வடக்கிற்கும் கிழக்கிற்கும் தமிழர் ஒருவரையே ஆளுநராக நியமிப்பது சிறப்பாக அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.




எனினும், பெரும்பான்மையினமான சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்படுவதில் ஆட்சேபனை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்றைய தினம் 6 மாகாணங்களுக்கான ஆளுநர்களை நியமித்துள்ள நிலையில், அம்பாறையில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்


Powered by Blogger.