முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான் முறைப்பாட்டை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பொய் சாட்சியம் வழங்கியதாக தெரிவித்து இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.