விரிவடையும் உட்கட்சி மோதல் கோத்தா பக்கம் தாவும் ஐ.தே.க முக்கியஸ்தர்கள்






ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்களும், முக்கியஸ்தர்களும் கட்சியிலிருந்து வெளியேறி கோட்டாபஜ ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.





ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு கொடுப்பதில்லை எனவும். முஸ்லிம் அரசியல்வாதிகளுடனான கூட்டு சிங்கள மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பலையை ஏற்படுத்தியுள்ளதாலும் சஜித்துக்கு ஆதரவு வழங்காது கட்சியிலிருந்து வெளியேறி கோட்டாபஜ ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு வழங்க உள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.





இவ்விடயம் தொடர்பில் உயர் மட்டங்கள் கூடி ஆராய்ந்தபோது எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதனால் மனமுடைந்து சஜித் கூட்டத்தைவிட்டு வெளியேறியதாகவும் அறிய முடிகின்றது.












Powered by Blogger.