இரண்டு மணி நேரத்தில் நடைபெற வேண்டும்! அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு






இடைக்கால அரசாங்கத்தில் பதவியேற்கும் அமைச்சர்கள் இரண்டு மணி நேரத்தில் தமது அமைச்சுப் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.




15 பேர் கொண்ட சிறிய அமைச்சரவை இன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதன்போது பதவிப் பிரமாணம் செய்யும் அமைச்சர்கள் அனைவரும் உடனடியாக தமது பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இலங்கை அரசியல் நடைமுறையில் சத்திப்பிரமாணம் செய்யும் அமைச்சர்கள், தமக்கு பொருத்தமான நாளொன்றில் அமைச்சு கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பர்.


இந்நிலையில் திறமையான பொது சேவையை உருவாக்கும் நோக்கில் ஜனாதிபதியால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்து அரச சேவையில் பல மாற்றங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.