தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை என தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.
இந்நிலையில், புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தமிழில் தேசிய கீதம் பாடுவதை தடை செய்து எந்தவொரு பணிப்புரையும் விடுக்கவில்லை என வாசுதேவ நாணயக்கார எம்பி சற்றுமுன் அமைச்சர் மனேகணேசனுக்கு தெரிவித்துள்ளார்.
இதனை அமைச்சர் மனோகணேசன் தனது முகப்பு புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.