இலங்கையின் இடைக்கால புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகி உள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தற்போது கலைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த ரணில், ராஜினாமா கடிதத்தை கையளித்ததுடன், பிரமரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் காலம் வரையில் இடைக்கால அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்கப்படவிருந்த பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இடைக்கால அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 12 அமைச்சுகளும் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 03 அமைச்சுகளும் பதவி வழங்கப்படவுள்ளன.
அத்துடன் நிதி அமைச்சு பதவியும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
#BREAKING Sri Lanka's new president names brother Mahinda as PM: official pic.twitter.com/fP4QkQyZmK
— AFP news agency (@AFP) November 20, 2019