தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் மோகன் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து வந்ததுடன் தமிழ் முஸ்லிம் மக்களிடையே குழப்பங்களையும் ஏற்படுத்தி வந்திருதார்.
இதன் பின்னணியில் அமீர் அலி இருப்பதையும் பல மில்லியன் இதற்காக கைமாறப்பட்டுள்ளதையும் நாம் பல தடைவ சுட்டிக்காட்டியிருந்தோம்.
சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டம் அண்மையில் செங்கலடியில் இடம்பெற்றபோது அந்த மேடையில் அமீர் அலி அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். இந்த பிரச்சாரக் கூட்டத்தினை தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் மோகனும் அமீர் அலி அவர்களும் இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்ததனை ஒரு மாதத்திற்கு முன்னர் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
தமிழர்களின் பல காணிகளை கள்ள உறுதி முடித்து முஸ்லிம்களுக்கு மோகன் அவர்கள் விற்பனை செய்தமை குறிப்பிடத்தக்கது.