மட்டு அரச அதிபர்
ஊதயகுமார் 21.10.2019 அன்று வாழைச்சேனை வாசுகி விடுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின்
உயர் மட்டக்குழுவினரை இரகசியமாக சந்தித்ததற்கான ஆதாரங்களை ஊடகவியளார்களிடம் காண்பித்ததுடன்
இவ்விடயம் தொடர்பில் தேர்தல் ஆணையளரிடமும் முறைப்பாடு செய்திருந்தனர்.
அம்முறைப்பாட்டில்
கடந்த 21.10.2019 அன்று 9.30 மணியளவில் கல்குடாவில் அமைந்துள்ள வாசுகி விடுதியில் மட்டு அரச அதிபரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டதாகவும், இச் சந்திப்பில் வாக்கெண்ணும் அதிகாரிகள் நியமனம் உட்பட, வாக்கு மோசடி தொடர்பாகவும், வாக்கெண்ணும் அதிகாரிகள் நியமனம் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளதா? எனவும், அதிகாரிகள் பக்கச்சார்பாக நடந்துகொண்டு வாக்கு மோசடிகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதா என்கின்ற சந்தேகம் உள்ளதாகவும் என்கின்ற முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் எந்தவிதமான
நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் தேர்தலும் நடந்து முடிந்துள்ளது?
இந்த விடயத்தை ஆராய்ந்து நடவடிக்கை
எடுக்காதது ஏன்?
இனிமேலும் உயர் அதிகாரிகள் இவ்வாறு
செயற்படாது இருப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமா?
தொடர்புடைய செய்தி - மட்டு அரச அதிபர் தேர்தல் மோசடியில் ஈடுபட திட்டமிட்டாரா?