மக்களோடு மக்களாக விமான நிலையத்தில் நுழைந்தார் கோட்டா!



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியாவிற்கான தனது பயணத்தை இன்று பிற்பகலில் ஆரம்பித்துள்ளார்.




கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சாதாரண பயணிகள் செல்லும் நுழைவு வழியில் தனது 08 பேருடன் இந்தியாவிற்கு ஜனாதிபதி சென்றார்.


இதற்கமைய நாளை வெள்ளிக்கிழமை இந்தியப் பிரதமருடன் சந்திப்பையும் அவர் நடத்தவிருக்கின்றார்.


இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பதவிக்கு வந்த ஆரம்பத்தில் விமான நிலையத்தில் சாதாரண மக்கள் பயணிக்கும் வழியிலேயே சென்றமை குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.