பிரசாந்தனுக்கு இணையத்தள அச்சுறுத்தல்






பிள்ளையானின் கட்சியின் செயலாளர் பிரசாந்தனின் பெயரில் போலி முகப்புத்தக கணக்கினை உருவாக்கி அதிலே சஜித்துக்கு ஆதரவு வழங்குமாறு கூறியுள்ளதுடன் அதனை Batti Tamil  journalists whatsapp குழுவிலும் பகிர்ந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது


அம் முறைப்பாட்டில்...








அன்பின் முகப்புத்தக தோழர்களே


எனது முகப்புத்தகம் போன்று போலியாக நான் சஜித் பிரேமதாச விற்கு ஆதரவு வழங்கக் கூறியதாக போலியாக ஒரு பதிவு இடம்பெற்றுள்ளது ஆகவே இந்த போலி பதிவு தொடர்பாக தேர்தல் முறைப்பாட்டு பிரிவுக்கு என்னால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான போலியான ஒரு முகப்புத்தக பதிவு ஆகவே இவ்வாறான போலி வதந்திகள் மூலம் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அவருக்கு கேட்பதற்காக ஈடுபடுகின்ற மிக மோசமான கூட்டம் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும்.


வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் எல்லோரும் ஒன்றிணைந்து கிழக்குத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் மொட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் அதன் மூலமே கிழக்கு மாகாணத்தை தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் ஊடாக கட்டியெழுப்ப முடியும் என்பதனை முகப்புத்தக தோழர்களுக்கும் சமூக வலையத்தள செய்தியாளர்களுக்கும் அதேபோன்று செய்தி பார்ப்பவர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது









































Powered by Blogger.