மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஆதரவாக 7 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
சபையை ஆளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரவாகவும், தமிழ் மக்கள்
விடுதலைப் புலிகள் கட்சியின் 4 உறுப்பினர்களும், விடுதலைக் கூட்டணியின் 3 உறுப்பினர்களும்,
வரதர் அணி உறுப்பினர் ஒருவரும், சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவரும் , ஶ்ரீ லங்கா சுதந்திரக்
கட்சி உறுப்பினர் ஒருவரும் எதிராக வாக்களித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் நடுநிலை வகித்துள்ளார்.
இப்பிரதேச சபையானது சிறிநேசனின் கோட்டை என்று சொல்லப்பட்டது.
ஏனைய பிரதேச சபைகளும் ஆட்டம் காணக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. கூட்டமைப்பின் பல உறுப்பினர்கள் கோட்டாபாஜ ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது