தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரசுக்குமிடையே ஒப்பந்தம் கைச்சாத்து






தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரசுக்குமிடையே ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.





நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில்  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.







இவ் ஒப்பங்தத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் அவர்களும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் கைச்சாத்திட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.





இவ் ஒப்பந்தத்தில்  கிழக்கிலே இப்போது கூட்டமைப்புக்கும் முஸ்லிம்களுக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளவர் பிள்ளையான். ஆகவே சஜித் வெற்றி பெற்றதும் பிள்ளையானை வெளியே வராத அளவிற்கு சட்டத்தினை பயன்படுத்த சஜித்தை வலியுறுத்துவது என்பதே பிரதான விடயமாகும். 


கிழக்கிலே பிள்ளையானின் ஆதரவு அதிகரித்துவரும் நிலையில் வெளியில் வந்தால் கூட்டமைப்பு இல்லாது ஒழித்துக்கட்டப்படும் எனவும் முஸ்லிம்களுக்கு பெரும் சவாலாக பிள்ளையான் அமைவார் எனவும் சம்மந்தன் ஹக்கீமிடம் கூறியுள்ளார். 


 இதற்கு தாம் ஆதரவு வழங்குவதாக இருந்தால் முஸ்லிம் காங்கிரசுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி வழங்கப்படவேண்டும் என ஹக்கீம்கேட்டுள்ளார். அதற்கு இணங்கியுள்ள சம்மந்தன் தமது கட்சிக்கு கிழக்கு மாகாணசபையில் இரு அமைச்சுக்களை வழங்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


இரு சாராரும் இணக்கப்பாட்டிற்கு வந்து ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது





Powered by Blogger.