ஜனாதிபதிக்கு முன்னாள் பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை






ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களின் பாதுகாப்பை புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.







தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.





நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் எதிர்நோக்கி வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.





ஒரு தேர்தலின் போது மட்டுமல்ல, அதற்குப் பின்னரும் மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் ரணில் விக்ரமசிங்க அந்த பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.








Powered by Blogger.