மட்டு அரச அதிபர் ஐக்கிய தேசியக் கடசியுடன் இணைந்து வாக்கு மோசடியில் ஈடுபட திட்டமிட்டுள்ளாரா என்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மட்டு
அரச அதிபர் M.உதயகுமாருக்கு எதிராக தேர்தல்கள் ஆணையாளரிடம் தமிழ் மக்கள் விடுதலைப்
புலிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த
21.10.2019 அன்று 9.30 மணியளவில் கல்குடாவில் அமைந்துள்ள வாசுகி விடுதியில் மட்டு
அரச அதிபரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் இரகசிய சந்திப்பொன்றை
மேற்கொண்டதாகவும், இச் சந்திப்பில் வாக்கெண்ணும் அதிகாரிகள் நியமனம் உட்பட, வாக்கு
மோசடி தொடர்பாகவும், வாக்கெண்ணும் அதிகாரிகள் நியமனம் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளதா? எனவும், அதிகாரிகள் பக்கச்சார்பாக நடந்துகொண்டு வாக்கு மோசடிகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதா
என்கின்ற சந்தேகம் உள்ளதாகவும் என்கின்ற முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.