பிள்ளையான், கணேசமூர்த்தியின் நிலைப்பாடு என்ன? தமிழர்களின் வாக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு செல்லுமா?







விரைவில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் தமிழர்களின் வாக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிலையை இந்த தேர்தலும் தோற்றுவிக்குமா என்கின்ற சந்தேகம் தமிழ் மக்களிடையே உள்ளது.











கடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் பிள்ளையான் மஹிந்த அணியுடன் போட்டியிட்டிருந்தார். கணேசமூர்த்தி ஐக்கிய தேசியக் கட்சியிலும் போட்டியிட்டிருந்தார்.





பிள்ளையானுக்கு தமிழர்கள் வழங்கிய வாக்கினால் ஹிஸ்புல்லாவும், கணேசமூர்த்திக்கு தமிழ் மக்கள் வழங்கிய வாக்கினால் அமீர் அலியும் தெரிவானார்கள்.





தனித் தமிழ் தொகுதியான பட்டிருப்புத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிளை கணேசமூர்த்தி இல்லாமல் செய்து பட்டிருப்பு தொகுதி மக்களை அரசியல் அனாதையாக்கினார்.





நடைபெறவுள்ள தேர்தலில் இவர்கள் இருவரதும் நிலைப்பாடு என்ன? இனிமேல் பேரினவாதக் கட்சிகளில் போட்டியிடுவதில்லை தமது படகு சின்னத்திலேதான் போட்டியிடவுள்ளதாக பிள்ளையானின் கட்சியின் செயலாளர் பிரசாந்தன் அண்மையில் கூறியிருந்தார்.





ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவியில் உள்ள கணேசமூர்த்தி இவ்விடயம் தொடர்பில் இதுவரை வாய்திறக்கவில்லை. தான் போட்டியிடுவதற்கான முன்னெடுப்புக்களை செய்துவருகின்றார்.





இவர் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதால் இவரிடம் உள்ள 5000 - 8000 வாக்குகளை பெற்று அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினராகக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. பட்டிருப்புத் தொகுதி மீண்டும் அரசியல் அனாதையாக்கப்பட வாய்ப்புள்ளது.





கணேசமூர்த்தியும், அவரின் ஆதரவாளர்களும் சிந்தித்து தமிழரின் அரசியல் இருப்புக்காக முடிவுகளை எடுப்பார்களா?


Post Comments

Powered by Blogger.