தேர்தல் பிரச்சாரத்திற்காக சித்தாண்டிக்கு வந்த ரணிலை பொது மக்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இன்றைய தினம் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்காக பிரச்சாரத்திற்காக சித்தாண்டிக்கு வருகை தருவதற்கு இருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்களை பொது மக்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இரண்டு, மூன்று நாட்களாக ஆலயத்தின் ஒலிபெருக்கியில் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு ஆலய வளாகத்திலே கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து கூட்டத்தை இரத்துச் செய்துவிட்டு ரணில் சென்றுள்ளார்.