முன்னாள் பிரமதர் ரணில் விக்ரமசிங்க, சஜித்துக்கு வழிவிட்டு, அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு இடமளிக்க வேண்டும். அதுவே ஜனநாயக மரபாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது..
மேலும் கூறியுள்ளதாவது சஜித் பிரமேதாச, மக்களின் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற இளம் தலைவர்.
நாம் யாரையும் ஆழமாக ஆதரிக்கவில்லை. தேர்தலில் நின்ற இரு பகுதியினருடனும் தொடர்புகளை வைத்திருந்தோம்.
மேலும் எமது எதிர்கால நிலைப்பாடு குறித்து, ஜனநாயக ரீதியான முடிவுகளை நாம் எடுக்கவுள்ளோம்.
எமது மக்களைப் பொறுத்தளவில் நடந்து முடிந்தத் தேர்தலில் ஒற்றுமையாக வாக்களித்துள்ளனர். அவர்களிடத்தில் ஒற்றுமை மேம்பட்டதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மிக நெருக்கமாக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்த தகவல் பெரும் ஏமாற்றம் என கொழும்புத் செய்திகள் தெரிவிக்கின்றன.