உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடாத்துவதற்கு விசேட ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை கூறியுள்ளார்
.இதேவேளை இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.