ஜனாதிபதி கோட்டாபயவினால் புதிய ஆளுனர்கள் நியமனம்






ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை சற்றுமுன் நியமித்துள்ளார்.







புதிய ஆளுநர்கள், ஜனாதிபதி முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.


  • அதற்கமைய ஊவா மாகாண ஆளுநராக ராஜா கொல்லுரே நியமிக்கப்பட்டுள்ளார்.

  • மேல் மாகாண ஆளுநராக சீதா அரம்பேபோல நியமிக்கப்பட்டுள்ளார்.

  • வடமேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸ்ஸமில் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • சப்ரகமுவ ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவ நியமிக்கப்பட்டுள்ளார்.

  • மத்திய மாகாண ஆளுநராக லலித் யூ கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

  • தென் மாகாண ஆளுநராக வில்லி கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.



அண்மையில் ஜனாதிபதி போட்டாபய ராஜபக்ஸ அனைத்து ஆளுநர்களையும் பதவி விலகுமாறு உத்தரவிட்டிருந்தார்.


அதற்கமைய வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட அனைவரும் தமது பதவிளை இராஜினாமா செய்திருந்தனர்.


Powered by Blogger.