பயங்கரவாத தடைச்சட்டத்தை எந்தவொரு காரணத்திற்காகவும் நீக்கப்போவதில்லை – சஜித் பிரேமதாச



பயங்கரவாத தடைச்சட்டத்தை எந்தவொரு காரணத்திற்காகவும் நீக்கப்போவதில்லை எனவும் நிபந்தனைகளின்றியே தான் வேட்பாளராக முன்நிற்பதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.







நீர்கொழும்பில் கிரீன் பார்க் மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


மேலும் தனியார்மயப்படுத்தலை விரும்பாதவன் என்றும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தனியார்மயப்படுத்தும் முட்டாள்தனமான தீர்மானத்தை எடுக்கப்போவதில்லை எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.


மேலும், அனைத்து அரச நிறுவனங்களையும் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதாகவும் திறமையுள்ள சிறந்த நபர்களை ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு நியமிப்பதாகவும் சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்தார்.


ஜனாதிபதி, பிரதமர் அல்லது அமைச்சர்கள் வௌிநாட்டிற்கு விஜயம் செய்தால், நாட்டிற்கு பயன்தரும் விடயங்களை எடுத்து வரவேண்டும். இல்லாவிடின், மீண்டும் வௌிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


Powered by Blogger.