நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டாலும் அது தொடர்பான தயார்படுத்தலை மேற்கொள்ள தமக்கு இரண்டுமாதகால அவகாசம் தேவைப்படுமெனவும் எனவே ஏப்ரல் அல்லது மே மாத முற்பகுதியிலேயே தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற புதிய அமைச்சரவையின்போது உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய,
நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்ல அரசியலமைப்பு வழங்கிய முதல் வாய்ப்பை பெறுவேன் எனத் தெரிவித்திருந்தார்.இதன்படி அடுத்த வருடம் மார்ச்மாதம் 2 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஏப்ரல் அல்லது மே மாத தொடக்கத்தில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
அடுத்தவருடம் முற்கூட்டியே நாடாளுமன்ற தேர்தலுக்கு அழைப்பு விடுத்தால் தேர்தல் ஆணையம் 2019 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவேட்டை பயன்படுத்தும். 2018 வாக்காளர் பதிவேட்டை கொண்டே (15,992,096 வாக்காளர்கள்) 2019 ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.