கல்முனையில் தமிழர்களின் 800 ஏக்கர் காணிகளை பறிக்கும் ஹக்கீம் - ரணிலின் சதித் திட்டத்தை அம்பலப்படுத்திய பிள்ளையான் அணி
ரவூப் ஹக்கிம் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவரும் இணைந்து கல்முனை பிரதேசத்தை முஸ்லிம் மயமாக்கும் சதித் திட்டம் தொடர்பான வீடியோவை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர்.
கல்முனை நகரமயமாக்கல், கல்முனை பிரதேச செயலக விடயங்களை வைத்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இருவரும் இணைந்து தமிழருக்கு எதிராக செய்யும் சதித்திட்டங்களை பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர்.
ரவூப் ஹக்கீம் அவர்கள் தனது சகாக்களுக்கு தமது திட்டங்களை; தெளிவுபடுத்தும் வீடியோவாக இது அமைந்துள்ளது.
இத்திட்டங்களை நடைமுறைப்படுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வாக்குறுதியளித்துள்ளதாக அந்த வீடியயோவில் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
இதில் தமிழ் மக்களின் 800 ஏக்கர் காணிகளை சுவிகரித்து பறிமுதல் பறிக்கும் திட்டத்தi தெளிவாக கூறியுள்ளார் ரவூப் ஹக்கீம் அவர்கள்.
சஜீத் ஜனாதிபதியாக வந்தால் கல்முனை நகரமயமாக்கல் திட்டத்தின் மூலம் தமிழர்களின் காணிகள் பறிக்கப்படுவதுடன் கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தப்படும் விடயத்தில் தமிழர்கள் பழி வாங்கப்படுவார்கள், கிழக்கு முற்றாக பறிபோகும் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் குற்றம்சாட்டிவருவதும் குறிப்பிடத்தக்கது