சஜித் ஜனாதிபதியானால்
தானே பிரதமர் என்று நேற்றைய தினம் பிரதமர் ரணில் அவர்கள் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பானது
அரசியலில் பல மாற்றங்களையும் விமர்சனங்களையும் தோற்றுவித்துள்ளது.
இந்த அறிவிப்பால்
சஜித்துக்கு ஆதரவு வழங்கவிருந்த பலர் ஆதரவு வழங்குவதில்லை எனும் நிலைப்பாட்டில் உள்ளதாக
அறிய முடிகின்றது.
நான்கரை வருட நல்லாட்சியில்
எதுவும் நடக்கவில்லை, மத்திய வங்கி ஊழல், ஊழல் செய்தவர்களை தப்பிக்க விட்டமை, அபிவிருத்தி,
வேலைவாய்ப்பு என்பவற்றில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதுடன் முஸ்லிம் அரசியல்வாதிகளை
ரணில் தனது செல்லப்பிள்ளைகளாக வைத்துக்கொண்டுள்ளமை.
உயிர்த்த ஞாயிறு
தாக்குதல்தாரிகளை தப்பிக்க விட்டமை, தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களை படிப்படியாக விடுதலை
செய்தமை, சஹ்ரானுடன் தொடர்புடைய முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்காது
காபபாற்றியமை, என்று பல குற்றச்சாட்டுக்களை ரணில் மீது பலரும் முன்வைக்கின்றனர்.
சஜித் ஜனாதிபதியானால்
பிரதமராக ரணில் பொறுப்பேற்றால் சஜித்தால் தனித்து முடிவெடுக்க முடியாத நிலை ஏற்படும்.
ரணிலுடன் செல்லப்பிள்ளைகளாக
இருக்கின்ற ரவூப் ஹக்கீம், அலிசாகீர் மௌலானா, அமீர் அலி, ஹரிஸ் போன்றோரின் ஆலோசனைக்கமையவே
முடிவுகள் எடுக்கப்படும்.
பிரதமர் ரணில்
விக்கிரமசிங்கவின் இந்த அறிவிப்பானது சிங்கள
மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் அதே வேளை, தமிழ் மக்களிடத்திலும் பல சந்தேகங்களை
தோற்றுவித்துள்ளது.
ரணில் பிரதமரானால்
கல்முனை பிரதேச விவகாரத்தை முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஹரிஸ் செயற்படுவார் அத்துடன் முஸ்லிம்களின்
கிழக்கிஸ்தான் உருவாகுவதற்கான காய் நகர்த்தல்கள் இடம்பெறும் எனவும் சந்தேகங்கள் எழுகின்றன.