கிழக்கில் ஆளுனர் பதவியை நாமே பெறவேண்டும் - ஹக்கீம்








கிழக்கு மாகாண
ஆளுனரை மீட்டும் முஸ்லிம் சமூகமே பெற வேண்டும் என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.





சஜீத்துக்கு ஆதரவான
தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்துள்ளார்.





தொடர்ந்து உரையாற்றுகையில்..





கிழக்கு மாகாணம்
முஸ்லிம்களுக்கு சொந்தமானது. கிழக்கை முஸ்லிம்களே ஆள வேண்டும். அதற்காகவே நாம் சஜித்துடன்
கைகோர்த்துள்ளோம். அண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் கருணா அவர்கள்
கூறியுள்ளார்கள் மொட்டுக்கு வாக்களித்து கோத்தாபஜ ராஜபக்‌ஷவை வெற்றிபெறச் செய்யுங்கள்.
கிழக்கு ஆளுனரை தமிழர்களுக்கு பெற்றுத் தருவேன் என்று. கிழக்கில் தமிழ் முதலமைச்சரையும்,
தமிழர் ஆளுனராவதற்கும் கருணா, பிள்ளையான, வியாளேந்திரன் போன்றோர் கோத்தாவுடன் இரகசிய
ஒப்பந்தம் செய்துள்ளனர். அவர்களின் அந்த கனவு நிறைவேற விடக்கூடாது.










சஜித் பிரேமதாசவிடம்
நாம் உறுதியாக சில விடயங்களை கூறியுள்ளோம் அவர் கிழக்கு முஸ்லிம்களை கைவிடமாட்டார்
என்ற நம்பிக்கை எமக்குண்டு. நீங்கள் அன்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாசா அவர்களை
வெற்றிபெறச் செய்தால் கிழக்கிலே முஸ்லிம்கள் நிம்மதியாக வாழலாம் ஆனால் கோத்தா வெற்றிபெற்றால்
கிழக்கிலே பிள்ளையான் கருனா ஆதிக்கம் அதிகரித்து முஸ்லிம்கள் அடக்கப்படுவார்கள் என்றும்
குறிப்பிட்டார்.





Powered by Blogger.