இராஜினாமா செய்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் அமைச்சு பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னர் நாட்டில் எழுந்த நெருக்கடி நிலைமையை அடுத்து அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் அவர்களுக்கான அமைச்சு பதவிகளை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமரின் பணிப்புரைக்கு அமைய பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இராஜினாமா செய்த அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களுக்கும் முன்னர் வழங்கப்பட்ட பதவி விரைவில் மீளவும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.