பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனால் அனுப்பி வைக்கப்பட்டவர்களினால் வாழைச்சேனை பேத்தாளை பொது நூலக உத்தியோகத்தர் தாக்கப்பட்டு ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது.
தேசிய ரீதியில் சிறந்த நூலகமாக விளங்கிக்கொண்டிருக்கும் பேத்தாளை பொது நூலகமானது பல தகவல்களை சேகரித்து ஆவணப்படுத்தும் செயற்றிட்டத்தினை வாசகர் வட்டத்துடன் இணைந்து செயற்படுத்தி வருகின்றது.
அதனடிப்படையில் கிழக்கு மாகாணசபையின் அதிகாரபூர்வ அறிக்கையானது (ஹன்சாட்) குறித்த நூலகத்தில் 2008 தொடக்கம் 2012 வரை உள்ளதுடன் அதன் பின்னரானவை இல்லாததனால் அதனை கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் திரவியம் அவர்களிடம் பெற்றுக்கொள்வதற்கு நூலக உத்தியோகத்தர் ம.பிரகாஸ் அவர்களும், வாசகர் வட்ட உறுப்பினர் தஹிவரன் அவர்களும் கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் அவர்களின் அனுமதியுடன் 05.06.2019 அன்று சென்றுள்ளனர்.
ஹன்சாட் அறிக்கைகளை திரவியம் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு வரும்போது குறித்த பிரதேசத்தில் ஊடகவியலாளராக செயற்பட்டுபவரும் கோறளைப்பற்று மத்தி பிரதேச சபையின் கீழ் இயங்கும் பொது நூலகத்தின் நூலகரான கைலாயப்பிள்ளை ருத்திரன் என்பவரும் கோறளைப்பற்றுறு பிரதேதச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணிபுரியும் வெற்றிவேல் மோகன்ராஜ் என்பவரும் ஹன்சாட் ஆவனங்களுடன் வந்த பிரகாஸ் அவர்களை தாக்கிவிட்டு ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் கல்குகுடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாக்கியவர்களை பொலிசார் விசாரித்தபோது இவ் ஆவணங்களை பறித்து வரும்படி யோகேஸ்வரன் அவர்கள் அனுப்பியதாக பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வவரனிடம் தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் தொடர்புகொண்டு கேட்டபோது தான்தான் அவ் ஆவணங்களை பறித்துவரும்படி குறியதாக யோகேஸ்வரன் அவர்கள் கூறியுள்ளார்.