சஹ்ரானை ஏன் கைது செய்யவில்லை? காத்தான்குடி முக்கிய நபர்களுக்கு அழைப்பு!



ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.




நாளை நடைபெறவுள்ள தெரிவுக்குழு அமர்வின் போது மேலும் ஒரு அமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தாக தெரிவுக்குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். காத்தான்குடியில் பாரம் பரிய முஸ்லிம் மக்களின் 120 வீடுகளை சஹ்ரான் தீயிட்டுக் கொளுத்தியிருந்ததாகவும், அந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரும் விசாரிக்கவில்லை எனவும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவுக் குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்திருந்தார்.


மேலும், மக்கள் வீதியில் இறங்கி சஹ்ரானை கைது செய்வதற்கான ஆர்ப்பாட்டங்களை செய்ததாகவும், அவரைக் கைது செய்ய முயற்சித்த பொலிஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இவ்வா றான ஒரு சூழ்நிலையில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


நாளை செவ்வாய்க்கிழமை மீண்டும் விசேட தெரிவுக்குழுவின் அமர்வு இடம்பெறவுள்ளது. பிற்பகல் 02 மணிய ளவில் தெரிவுக்குழுவில் சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது. அரச அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற பாதுகாப்புத்துறையுடன் தொடர்புடைய அதிகாரிகள் பகிரங்கமாக விசாரணைக்கு உட்படுத் தியமை தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.


எனினும், பகிரங்கமாகவே தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் என தெரிவுக்குழுவின் தலைவரான, பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.


Powered by Blogger.