அதிரடி நடவடிக்கையில் இறங்கிறார் ரிசாத் பதியுதீன்






தென்னிலங்கை அரசியல்வாதிகளின் குறுகிய அரசியல் நோக்கம் காரணமாக முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.










நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வௌியிட்ட கருத்துக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.





இன்று காலை 11 மணியளவில் அவர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.





விமல் வீரவன்ச முன்வைத்துள்ள பல பொய்யான குற்றச்சாட்டுக்களால் தான் உள்ளிட்ட முஸ்லிம் சமூகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





இதன் காரணமாக விமல் வீரவன்சவின் குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட கருத்துக்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ததாக ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார்.


Powered by Blogger.