ஜனாதிபதியின் எச்சரிக்கையால் கலங்கும் சமூக வலைத்தள பயனர்கள்






இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முழுமையாக முடக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தற்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.










இன்றைய தினம் சமூக வலைத்தளங்களின் தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் நேற்றைய தினம் பல போலியான தகவல்கள் பகிரப்பட்டிருந்தன.





இலங்கையில் மீண்டும் சமூக வலைத்தளங்களை செயற்படுத்துவது தொடர்பில் ஆலோசித்து வருகிறோம். சமூக வலைத்தள நிர்வாகிகளை இன்றைய தினம் நான் சந்திக்கவுள்ளேன்.





இவ்வாறான நடவடிக்கை கட்டுப்படுத்தவில்லை என்றால் சமூக வலைத்தளங்களை முழுமையாக தடை செய்து விடுவேன் என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலை அடுத்து சமூக வலைத்தளங்கள் முழுமையான முடக்கப்பட்டுள்ளன. வட்ஸ்அப், வைபர், பேஸ்புக், ஐஎம்ஓ. யூரியூப் என்பனவற்றின் சேவைகள் இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.