கொள்ளுப்பிட்டி பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் இருந்த கட்டடமொன்றில் இருந்து தற்கொலை அங்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் இருவர் இருந்ததுடன் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை பொலிஸார் தேடும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கைது செய்யபட்டவர் தங்கி இருந்த பள்ளிவாசல் ஒன்றில் இருந்து இராணுவ சீருடைக்கு ஒப்பான உடைகளும் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.