கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இதுவரையில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
சம்மாந்துறையில் பொலிஸாருக்கும், குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோக மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த மோதல் சம்பவம் தற்போது வரையில் தொடர்ந்துள்ளதாக அறியமுடிகின்றது. தற்கொலை குண்டுகள் தயாரிக்கும் நிலையம் ஒன்று உள்ளதாக ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய பொலிஸார் குறித்த பகுதிக்கு இன்று மாலை சென்றுள்ளனர்.
அங்கு சென்று சோதனையிட்ட போது, குழுவொன்று பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.