மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பின்புறத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டு நகரின் மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பின்புறமாகவுள்ள கட்டடத்தில் நகைத் தொழில் செய்துவரும்
மட்டக்களப்பு - கொக்குவில் பகுதியை சேர்ந்த க.அருட்செல்வம் (44 வயது) என தெரியவருகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.