இலங்கையின் நிலப்பரப்பு தங்களுக்கானதென பிரகடனம் செய்யும் ஐ எஸ் அமைப்பு






ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினால் இலங்கை தங்கள் அமைப்பிற்கான பூமி என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இது தொடர்பில் புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளதாக விமானப்படை புலனாய்வு பிரிவு அறிவிக்கை வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.










கொழும்பு விமானப்படை தலைமையகத்தில், புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இருந்து இதற்காக கடிதம் கடந்த 23ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.





இலங்கை பூமியை தங்கள் ஆட்சியை அமைப்பதற்கான இடமாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதெனவும், அந்த நடவடிக்கையினை எதிர்வரும் காலங்களிலும் முன்னெடுக்கப்படுவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.





அந்த நோக்கத்திற்காக தொடர்ந்து தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்வதற்கும், கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்வதற்கும், வெளிநாட்டவர்கள் இருக்கும் இடங்களில் தாக்குதல் மேற்கொள்வதற்கும், அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்கும், மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் தாக்குதல் மேற்கொள்ளுதல் போன்ற பயங்கரவாத செயற்பாடுகள் மேற்கொள்வதற்கும் தயாராகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த எச்சரிக்கை கடிதம் தொடர்பில் விமானப்படையின் ஊடக பிரிவிடம் விளக்கம் கேட்டது. எனினும் செய்தியை உறுதி செய்யவோ நிராகரிக்கவோ இல்லை என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டிள்ளது







Powered by Blogger.