வவுணதீவு பொலிஸார் கொலையே முதல் தாக்குதல்! மடிக்கணனி,பிஸ்ரல் மீட்பு!



மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில்இரு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஸஹாரான் குழுவினரின் சதித்திட்டம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது .


கடந்த வருடம் நவம்பர் மாதம் மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.







இந்த சம்பவத்தை மேற்கொண்டவர் குண்டுத் தாக்குதலில் தொடர்புடைய ஸஹாரானின் வாகன சாரதியான 53 வயதுடைய முகமது சாஹீர் ஆதம்பாலெப்பை என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது . இவர் தான் கத்தியால் குத்தியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளார் .


இவர் 35,000 சம்பளம் பெற்றுள்ளதுடன் , தொடர்சியாக தற்கொலை தாக்குதல் தொடர்பில் திட்டமிட்டுள்ளார்.இதன்போது அவரிடமிருந்து மடிக்கணனி மற்றும் கைத்துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


அவரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த விசாரணைகளின்போதே வவுணதீவு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் குண்டுத் தாக்குதலில் தொடர்புடைய ஸஹாரானின் வாகன சாரதிக்கு தொடர்புள்ளமை தெரியவந்துள்ளது.


இதனையடுத்து அவரை கொழும்புக்கு கொண்டுச்சென்று விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Powered by Blogger.