இலங்கையில் சற்று முன்னர் நடந்த பயங்கரம்! பலர் கொடூரமாக சுட்டுக் கொலை




தென்னிலங்கையின் தங்காலை குடாவெல்ல துறைமுகத்தில் இன்று அதிகாலை துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.





இன்று அதிகாலை 6.30 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு T56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தனிப்பட்ட பிரச்சினைக்கமைய இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

Powered by Blogger.