மட்டக்களப்பு மாநகர சபையின் 8 வது அமர்வு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இவ் அமர்வில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன் மாநகர உறுப்பினர்களின் தலைமையில் இரு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ் எழுத்துப் பிழைகளை நிவர்த்தி செய்வதற்கு ஒரு குழுவும், நுண்கடன் பிரச்சினை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்குமாக இரு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அண்மைக்காலத்தில் நுண்கடன் பல சமூகப்பிரச்சினைகளையும், உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் இவ்வாறான குழுக்களை அமைத்து ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவையுள்ளது.
ஆட்சியில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவதும் ஒருவரை, ஒருவர் மாறி, மாறி குற்றம் சுமத்துவதும் ஊடக அறிக்கைகளை வெளியிடுவதுமாக உள்ளனர்.
ஆனாலும் மாநகர சபையில் உள்ள கட்சிகளின் முட்டிமோதல் செயற்பாடுகளும் யார் பெரிது என்ற போட்டிகளும் அமைக்கப்பட்ட இரு குழுக்களும் சரியான நோக்கத்தை நோக்கி பயணிக்குமா?