மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏழு வருடங்களாக போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளராக கடமையாற்றியதுடன் இவ்வருடம் திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் இப்றாலெப்பை ஓய்வு பெற்று சென்ற நிலையில் புதிய பணிப்பாளராக திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் நியமனம் பெற்றுள்ளார்.
புதிய பணிப்பாளர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் தவறுகள், உயிர்ப்பலிகள், நிர்வாக சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?