சுனாமிக்குப் பின்னர் கடற்கரை ஓரங்களில் சவுக்கு மரங்கள் நாட்டப்பட்டு கடலோரக் கிராமங்களில் வானுயர்ந்த மரங்களாக காட்சி தருகின்றன.
கடலரிப்பை தடுக்கவும் சுனாமி பேரலைகளின் தடுப்பு சுவராகவும் வளர்க்கப்பட்ட இம்மரங்களை சில பிரதேசங்களில் அழிக்கப்படும் நிலை காணப்படுகின்றன.
களுதாவளை கடற்கரையில் இச் சவுக்கு மரங்களின் கீழ் சிலர் குப்பைகளை கொட்டுவதனால் சவுக்கு மரங்கள் அழியும் நிலயில் உள்ளது.
குப்பைகளையும், பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகளையும் சவுக்கு மரங்களின் கீழ் கொட்டிவிட்டு செல்கின்றனர். பின்னர் தீ வைத்துவிடுகின்றனர். அதனால் பல சவுக்கு மரங்கள் எரிந்து அடியுடன் விழுகின்றன.
மறுபுறத்தில் இங்கு கொட்டப்படும் குப்பைகளை நாய்களும், பறவைகளும் எடுத்துச் சென்று விவசாய நிலங்களிலும் மீனவர்களின் வலைகளிலும் போடுவதனால் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கடற்கரைப் பிரதேசங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக களுதாவளை பிரதேச சபையும் உரிய அதிகாரிகளும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் அழிவடையும் சவுக்கு மரங்களயும் பாதுகாப்பார்களா?