மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமுர்த்தி திணைக்களத்தில் இருந்து சுமார் 54 இலட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சமூர்த்தி வங்கிகளில் பண மோசடிகள் இடம்பெற்றுவருவதாக அவ்வப்போது பலரும் சுட்டிக்காட்டி வந்திருந்தனர்.
மோசடி செய்யப்பட்ட 54 இலட்சத்தில் ஒரு தொகைப் பணம் காசோலையாக மாற்றப்பட்டு மணமாக்கப்படடுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இதில் சுமார் 27 இலட்சம் கைது செய்யப்பட்ட சந்தேச நபர் ஒருசரின் வீட்டிலுள்ள தென்னை மரத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கோப்பாவெளிப்பகுதி பொதுமக்களின் பெயரின் காசோலை எழுதப்பட்டு மட்டக்களப்பு சமுர்த்தி திணைக்கள கணக்காளர் பஷீர் அவர்களின் கையெழுத்திடப்பட்டு குறித்த பணம் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு பொலிஸ் பெரும் குற்றத் தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட விரிவான விசாரணையின் பின்னர் சமூர்த்தி திணைக்களத்தில் கடமையாற்றிய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத்தொடர்ந்து 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.